யாழில் தாயைக் கொன்றாரா மகன்? – கை பேசிக்கு அடிமையானதால் விபரீதம்!

யாழில் தாயைக் கொன்றாரா மகன்? - கை பேசிக்கு அடிமையானதால் விபரீதம்!

Editor 1

கைபேசி விளையாட்டுக்கு அடி மையான சிறுவனே தனது தாயாரைக் கொன்றிருக்கலாம் என்று தெல்லிப்பழை பெண்ணின் மர்ம மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளது பொலிஸ்.

அத்துடன், சிறுவர்களுக்கு கைபேசிகளை வழங்குவது தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தெல்லிப்பழையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் 11 பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

கைபேசி விளையாட்டுக்கு அடிமையாகி மனநல பாதிப்பை எதிர்கொண்ட அவரின் 16 வயது மகனும் இதைத் தொடர்ந்து காணாமல் போனார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறுகையில்,

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகன் கைபேசி விளையாட்டுக்கு (மொபைல் கேம்ஸ்) அடிமையானவர் என்று கூறப்படுகின்றது.

அத்துடன், 16 வயதுடைய குறித்த சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம். அவரின் அறையில் சில வாசகங் கள் இரத்தத்தால் எழுதப்பட்டிருந்தன. இதனால், மகனே தனது தாயை கொலை செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறார்களிடம் கைபேசிகளை வழங்கு வது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயல்பட வேண்டும். அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதால்
பல்வேறு பிரச்னைகள் எதிர்நோக்க நேரிடும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Share This Article