அஞ்சலோட்டப் பாணியில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை நீந்திக்கடந்த வீரர்கள்!

அஞ்சலோட்டப் பாணியில் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை நீந்திக்கடந்த வீரர்கள்!

Editor 1

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 12 நீச்சல் வீரர்கள் பாக்கு நீரிணையை அஞ்சல் ஓட்ட பாணியில் நீந்திக் கடந்துள்ளனர்.

மகாராஸ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீச்சல் அறக்கட்டளையை சோந்த 12 இளம் நீச்சல் வீரர்களே இவ்வாறு இரண்டு குழுக்களாக பிரிந்து 10 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்துள்ளது.

இரு நாடுகளின் அனுமதியுடன் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் குறித்த நீச்சல் வீரர்கள் தமது பயிற்சியாளர்களுடன் இலங்கை வந்துள்ளனர்.

இந்த நிலையில் தலைமன்னாரிலிருந்து நேற்று காலை 6.30க்கு அஞ்சலோட்ட பாணியில் நீந்தத் தொடங்கிய குறித்த 12 பேரும் மாலை 4.40 அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை சென்றடைந்துள்ளனர்.

Share This Article