இலங்கையின் சனத் தொகை குறைந்தது!

இலங்கையின் சனத் தொகை குறைந்தது!

Editor 1

இலங்கையின் சனத்தொகை சுமார் ஒரு இலட்சத்து 44 ஆயிரத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை ஒன்று கூறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொரு ளாதார மற்றும் புள்ளிவிவரவி யல் திணைக்களத்தின் பேராசி ரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளில் மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச் சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கை யில்- மக்கள்தொகை குறைவு சத வீதம் 0.6. இதனால் பெண்களின் தொகை 70ஆயிரமும், ஆண் களின் தொகை 74ஆயிரமும் குறைந்துள்ளது.

இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது பிறப்பு எண்ணிக்கை 27421 ஆக குறைந்துள்ளது. இறப்பு எண் ணிக்கையும் 1447 ஆக அதிக ரித்துள்ளது. அதிகரிப்பு 1.8 சதவீதம். மத்திய வங்கியின் அறிக்கை யின்படி நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை 19,784 ஆக குறைந்துள்ளது – என்றார்.

Share This Article