ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளரை சிறீலங்கா பொது ஜன பெரமுன நிச்சயம் நிறுத்தும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரை தமது கட்சியின் ஆதரவைக் கோரவில்லை எனவும் மகிந்த கூறினார்.
இதன்போது, ஊடகவியலாளர் ஒரு வர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்னும் காலம் காத்திருக்க வேண்டும்- என்றார்.
கொழும்பு வெள்ளவத்தையில் இடம் பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மகிந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.