அம்பாறையில் விபத்து! மாணவர்கள் உட்பட்ட பத்துப் பேர் காயம்!

அம்பாறையில் விபத்து! மாணவர்கள் உட்பட்ட பத்துப் பேர் காயம்!

Editor 1

அம்பாறை – அக்கறைப்பற்று வீதியில் 2 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்த 10 பேரும் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article