நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்
களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு – ஐயங்கன்குளம் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை இடி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.