முன்னாள் ஜனாதிபதிகளின் அதி சொகுசு வாகனங்களால் 200 கோடி ரூபாய் மோசடி!

முன்னாள் ஜனாதிபதிகளின் அதி சொகுசு வாகனங்களால் 200 கோடி ரூபாய் மோசடி!

editor 2

முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்திய 60 இற்கும் மேற்பட்ட அதிசொகுசு வாகனங்களால் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி இடம்பெற்றுள்ளது – என்று ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது அவற்றில் இரண்டு வாகனங்கள் காணாமல் போயுள்ளன என்று அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சில வாகனங்களின் பெறு மதி 8 கோடி ரூபாய்க்கும் அதிகம். முன்னாள் ஜனாதிபதிகள் மூவர் பயன்படுத்திய 60 இற்கும் மேற்பட்ட அதிசொகுசு வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வாடகை பணத்தை செலுத்தத் தவறியுள்ளனர்.

இவற்றில் இரண்டு வாகனங்களை காணவில்லை. இந்த வாகனங்களை 2006ஆம் ஆண்டு முதல் மூன்று ஜனாதிபதிகள் பயன்படுத்தினர்.

இந்த வாகனங்களுக்கு ஜனாதிபதி செயலர்களே பொறுப்பு என்பதால், இது தொடர்பான வழக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் இலங்கையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டுள்ளன.

எந்தெந்த ஜனாதிபதிகள் வாகனங்களை பயன்படுத்தினார்கள், எவ்வளவு பணம் செலுத்த வேண்டியிருந்தது, வாகன இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் எதிர்காலத்தில் ஊடகங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தப்படும்.

பணம் செலுத்தத் தவறியதால், செலுத்தப்படாத தொகைக்கு 3 தொடக்கம் 4 வீதமான மாதாந்திர வட்டி வசூலிக்க சம்பந்தப்பட்ட வாகன நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

வரவு – செலவு திட்டத்தில் முன்னாள் ஜனாதிப திகள் என்ன செய்தார்கள் என்பதில் சிக் கல் இருக்கிறது என்று ஜனாதிபதி ரணில் கூறியிருந்தார்.

இது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் பகிரங்கப்படுத்தப்படும் – என்றும் கூறினார

Share This Article