முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியையும் அழித்து நாட்டையும் அளித்துள்ளார் என சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவரால் இழைக்கப்பட்ட தவறுகளையே தற்போது நாம் நிவர்த்தி செய்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.
சுதந்திரக் கட்சியில் உள்ளக ரீதியில் பல்வேறு நெருக்கடிகள் நிலவும் நிலையில் நேற்று முன்தினம் அந்தக் கட்சியின் செயல் குழு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கூடியது.
அந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமார துங்க வருகை தந்போது அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
2015 ஆம் ஆண்டில் என்னை ஜனாதிபதித் தேர்தலில் நிற்கச் சொன்னபோது நான் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த நடவடிக்கை எடுத்தேன். அவர் பதவியை வைத்துக் கொண்டு கட்சியை மட்டுமன்றி நாட்டையும் அழித்துவிட்டார்.
வீழ்ச்சியடைந்த கட்சியை மீண்டும் நிச்சயமாக பலமானதாக கட்டியெழுப்ப முடியும். கட்சியின் யாப்பை அவர் மாற்றியுள்ளார். அதை வைத்து தன்னிச்சையாக செய்யப்பட்டுள்ளார். எனினும் அதனை தாம் மாற்றவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மனநிலை பாதிப்பு என்று
நினைக்கின்றேன்-என்றார்.