தனியாக இரும்பு ஒட்டு வேலையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் மின்சாரம்
தாக்கி உயிரிழந்தார்.
மட்டக்களப்பு நகரில் திருமலை வீதியில் இளைஞனின் வீட்டில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சசிக்குமார் டினேஸ் (வயது 19) என்பவரே உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் தனியாக இருந்து தனது வீட்டில் வெல்டிங் – இரும்பு ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தபோது இளைஞரை மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் மயக்கமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சகோதரி அவரை அயலவர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடற்கூறாய்வு பரிசோதனையின் பின்னர் இளைஞரின் சடலம் நேற்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.