பொதுஜன பெரமுனவின் (SLPP) அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச்.நந்தசேன இன்று வியாழக்கிழமை காலை காலமானார்.
அவர் திடீர் சுகயீனம் காரணமாக 69 வயதில் காலமாகியுள்ளார்.
எச்.நந்தசேன பதவியா பிரதேச சபை மற்றும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராவார். அத்துடன் மாகாண அமைச்சுப் பதவியையும் அவர் வகித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.