இலங்கைக்கு கடன் வழங்கிவரும் சர்வதேச நாணய நிதியத்தின் சில முன்மொழிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த வலியுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள திட்டத்தின் சில யோசனைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.