இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி!

இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி!

editor 2

ஆசிய அபிவிருத்தி வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட நிதித்துறை நிபுணர் மனோஹரி குணவர்தன அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த கடன் தொகையில், 50 மில்லியன் அமெரிக்க டொலர், ஏற்றுமதி, சுற்றுலா, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள பின்னடைவை சந்தித்துள்ள சிறிய மற்றும்  நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த நிறுவனங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

குறித்த நிறுவனங்களில் 45 சதவீத பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

எனவே, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு, பொருளாதாரத்தில் தமது துறையின் பங்களிப்பை நிலைநிறுத்தவும் அபிவிருத்தியடையவும் தேவையான ஆதரவை வழங்குவது அவசியமானதாகும்.

அதன்படி, இந்த திட்டம் செயல்பாட்டு மூலதனத்தை வழங்குவதுடன், தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கும் உதவும்.

இதற்காக பெண்கள் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான உத்தரவாத மானியங்களை ஈடுகட்டுவதற்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர் விசேட வசதியையும் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share This Article