இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வழக்கு விவகாரத்தில் சுமுகமான தீர்வை எட்டுவதற்கு சுமந்திரன், சிறீதரன் இணக்கம் எட்டியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், அந்தக் கட்சிக்கு எதிரான வழக்கு விரைவாக நிறைவுக்குவரும் என்று கருதப்படுகின்றது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் நேற்று முன்தினம் வவுனியாவில் உள்ள அந்தக் கட்சியின் பணிமனையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் வழக்கை விரைவாக நிறைவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டது.
தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
வழக்கில் எதிராளியாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தமது கருத்துகளை ஏற்கனவே நீதிமன்றுக்கு தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில்,
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு எம்.ஏ.சுமந்திரன் எம்.பி.அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச்சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன.
அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்குவிட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது.
மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவருக்கும் (மாவை சேனாதிராசா) புதிய தலைவருக்கும் (சிறீதரன்) சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன்.
பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.
இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இதுவிடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை.
தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை.’, என்று கூறியிருந்தார்.