2022 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இலத்திரனியல் பொறியிலாளர்கள் 159 பேர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் பொறியிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் இலத்திரனியல் பொறியிலாளர்கள் 104 பேர் சேவையிலிருந்து விலகி வெளிநாடு சென்றுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சராசரியாக வீடுகளுக்கு புதிய மின் இணைப்பை பெறும் போது, இலங்கை மின்சார சபை மற்றும் தனியார் மின்சார நிறுவனம் என்பன அறவிடுகின்ற கட்டணத்தில் 4,000 ரூபாய் வித்தியாசம் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மின்சார பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.