நிதி அமைச்சில் பொருளாதாரத்தை தின்னும் பெருச்சாளி ஒன்று உள்ளது. இந்த எலி சிறிலங்கன் எயார் லைன்ஸிற்குள் இருந்தது என சுதந்திர மக்கள் சபையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மதிய உணவு வழங்கப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையை பதினொரு இலட்சத்திலிருந்து இருபது இலட்சமாக அதிகரிப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்களை முன்வைத்த போதிலும் நிதியமைச்சு பார்வையற்ற நோயாளியைப் போன்று செயற்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை நிதியமைச்சு மசாலாப் பொருட்களின் மீள் ஏற்றுமதியை அனுமதிப்பதற்கான வர்த்தமானியை வெளியிட்டது.
இதன் பின்னணியில் சதி உள்ளது.
மிளகு, இலவங்கப்பட்டை, மஞ்சள், இஞ்சி, சாதிக்காய் போன்ற மசாலாப் பொருட்களில் இலங்கை முன்னணியில் உள்ளது.
எங்களது தேநீருக்கு செய்தது போலவே வெளிநாட்டில் இருந்து தரம் குறைந்த மசாலாக்கள் கொண்டு வந்து அதனை இலங்கைப் பொருட்களுடன் கலந்து இலங்கை தயாரிப்பாக மீள்
ஏற்றுமதி செய்வதே நோக்கமாகும் – என்றார்.