வவுனியா வடக்கு – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான குறித்த போராட்டம் பேரணியாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை நோக்கி நகர்ந்தது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிரமலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட்ட பெருமளவானோர் பங்குகொண்டிருந்தனர்.