அம்பாறையில் மாற்றுவலுவுள்ள பிள்ளைகளை கொலை செய்த தந்தை!

அம்பாறையில் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளை கொலை செய்த தந்தை!

editor 2

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

சம்பவ தினமான இன்று வியாழக்கிழமை (14) காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளன.

தனது மாற்றுவலுவுள்ள இரு பிள்ளைகளை கொலை செய்த தந்தையும் தன்னைத் தானே தாக்கி காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மரணமடைந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம்  தொடர்பில்  பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில்   பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article