வடக்கின் பிரதம செயலாளராக இளங்கோவன் பதவி ஏற்றார்!

வடக்கின் பிரதம செயலாளராக இளங்கோவன் பதவி ஏற்றார்!

editor 2

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக எல். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்.

இளங்கோவன் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்த நிலையில்
அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் அவர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் கல்வி அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேசமயம், வடமேல் மாகாண பிரதம செயலாளராக தீபிகா குணரத்ன நேற்று நியமிக்கப்பட்டார்.

Share This Article