சாந்தனின் புகழுடல் யாழ்.வருவதில் தாமதம்!

சாந்தனின் புகழுடல் யாழ்.வருவதில் தாமதம்!

editor 2

சென்னையில் உயிரிழந்த சாந்தன் என்று அறியப்பட்ட தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் உட
லம் நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவரின் உடலத்தை பெறுவதில் தாமதம் நிலவியது.

நீண்ட இழுபறியின் பின்னர் சாந்தனின் உடலத்தை விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். குரலற்றவர்களின் குரல் அமைப்பினரும் சாந்தனின் உறவினர்களும்
பொறுப்பேற்றனர்.

உடலம் பிரேத பரிசோதனைக்கு கட்டாயம் உட்படுத்தப்படவேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியமையால், நீர்கொழும்பு மருத்துவமனையில் சாந்தனின் உடலம் ஒப்படைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் இன்று சனிக்கிழமை மதியமளவில் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வவுனியாவுக்கு கொண்டு வரப்படும் சாந்தனின் உடலம்
அங்கிருந்து மக்களின் அஞ்சலிக்காக ஊர்தி பயணமாக யாழ்ப்பாணத்துக்கு
எடுத்துவரப்படும்.

சாந்தனின் உடலம் யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் முடிவு செய்யப்படும் என்று தெரிய வருகின்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்
கைதான சாந்தன் 32 வருட சிறை வாசத்தின் பின்னர் கடந்த 2022 நவம்பர் 11 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார். அவர் உட்பட விடுதலையான இலங்கையர்கள் திருச்சி சிறப்பு முகாமில்
அடைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை வருவதற்காக நீதிமன்றத்தில் சாந்தன் வழக்கு தொடுத்த நிலையில், அவரின் தாயார் சாந்தனின் விடுதலைக்காக பலரையும் சந்தித்து கோரிக்கைளை விடுத்து வந்தார். இந்த நிலையில், அவரை இலங்கைக்கு அனுப்ப ஜனவரி 22ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதியளித்தது.

இதனிடையே, கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தன் இலங்கை திரும்பவிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article