எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் சேவைகளை பெற்றுக்கொள்ள வருவோர் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று இலங்கையின் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக இரு முறைமைகள் பின்பற்றப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளதாகவும் தமது திணைக்களத்தின் இணையத்தளமான www.dmtappointments.dmt.gov.lk பிரவேசித்து நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமெனவும் தொலைபேசி (011 2117116) அழைப்பின் ஊடாகவும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.