நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவில் இந்தியாவின் கலப்பு எரிசக்தி ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவில் கலப்பு எரிசக்தி ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

editor 2

யாழ்ப்பாணத்தின் நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவில்  மீள் புதுப்பிக்கத்தக்க கலப்பு எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் 10.995 மில்லியன் டொலர் – நம் நாட்டு மதிப்பில் சுமாராக 339 கோடி ரூபாய் நிதி மானியத்தில் இந்தத் திட்டம் அமைக்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தை எதிர்வரும் 2025 மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவை தளமாகக் கொண்ட யு – சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன் என்ற நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்த மின் உற்பத்தித் திட்டத்தின் மூலம் மூன்று தீவுகளிலும் 530 கிலோ வாட்ஸ் மின்சாரம் காற்றாலை மூலமும், 1,700 கிலோவாட்ஸ் சூரிய சக்தி மூலமும் 2,400 கிலோ வாட்ஸ் பற்றரி சக்தி மூலமாகவும் 2,500 கிலோவாட்ஸ் டீசல் சக்தி மூலமாகவும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

இதற்கான உடன்படிக்கையில் மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்தவும் யு – சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன் நிறுவன அதிகாரிகளும் இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா முன்னிலையில் ஒப்பமிட்டனர். 

Share This Article