இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிருடன் இருந்தவரையில் பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார்.
அரசியல்வாதிக்கு இது மிகவும் கடினமான விடயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க இந்த இரங்கல் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.