புதிய பயங்கரவாத சட்டத்தின் சில சரத்துக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!

புதிய பயங்கரவாத சட்டத்தின் சில சரத்துக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!

editor 2

புதிய பயங்கரவாத சட்டத்தின் சில சரத்துக்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனேயே நிறைவேற்ற முடியும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் வழங்கப்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் தீர்ப்பைக் கையளித்தார்.

திருத்தங்கள் இன்றி சட்டமூலம் நிறைவேற்றப்படுவதெனில், அதில் உள்ள சில சரத்துகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Share This Article