விவசாயத் துறையில் விரைவான மாற்றம் என்கிறார் ஜனாதிபதி!

விவசாயத் துறையில் விரைவான மாற்றம் என்கிறார் ஜனாதிபதி!

editor 2

விவசாயத் துறையில் விரைவான மாற்றத்துடன் விவசாயப் பயிர்களின் பிரதான ஏற்றுமதியாளராக இலங்கையை உயர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், நாடு கடந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் விவசாயம் பெரும் பங்களிப்பை ஆற்றியது. நாட்டை விரைவாக மீளக் கட்டியெழுப்பக்கூடிய இரண்டு பிரதான துறைகளாக விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன
என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37 ஆவது அமர்வின் ஆரம்ப அமர்
வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் 46 நாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 34 நாடுகளின் இராஜதந்தி
ரிகள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் ஆரம்பமான மாநாடு இன்று நிறைவடைகிறது – என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article