நாட்டை வங்குராேத்து அடையச் செய்த மத்திய வங்கி அதிகாரிகளின் மாதச் சம்பளம் நூற்றுக்கு 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்துக்கு அறிவிக்காமல் இவ்வாறு மேற்கொண்டிருப்பது சட்டவிராேத செயலாகும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கை பொறுப்பு பற்றுச்சீட்டுகள்(திருத்தச்) சட்டமூலம் உள்ளிட்ட 9 சட்டமூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாடு வங்குராேத்து நிலைக்கு செல்லும்போது இது தொடர்பாக மத்திய வங்கி ஆளுநரராே நிதி அமைச்சின் செயலாளராே நாட்டுக்கோ பாராளுமன்றத்துக்கோ வெளிப்படுத்தவில்லை.
ஆனால் நாடு வங்குராேத்து அடைவதை வெளிப்படுத்தாமல் மறைத்த மத்திய வங்கி அதிகாரிகளுக்கு நூற்றுக்கு 70 வீத சம்பள அதிகரிப்பு வழங்கி இருக்கிறது. எவ்வாறு இவ்வாறு சம்பளம் அதிகரிக்க முடியும்.
மக்களின் இடுப்புப்பட்டியை இறுக்கிக்கொள்ளுமாறும் காரியாலயங்களில் ஆளணியை குறைக்குமாறும் முழு நாட்டுக்கும் ஆலாேசனை வழங்கியது இவர்களாகும்.
ஆனால் மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் சம்பளம் 7 இலட்சத்து 12ஆயிரம் வரை அதிகரித்திருக்கிறது. இது முறையா என கேட்கிறேன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.