அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் மீனவர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.