தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது என்கிறார் அத்துரலிய ரத்ன தேரர்!

தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவன் கிடையாது என்கிறார் அத்துரலிய ரத்ன தேரர்!

editor 2

விடுதலைப் புலிகளுக்கு தான் எதிரானவன் கிடையாது என்று அத்துரலியே ரத்ன தேரர்
தெரிவித்துள்ளார்.

பொதுநிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவிததார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

என்னைப் பற்றி பெரும்பாலானவர்கள் நான் சிங்கள இனவாதி, புலிகளுக்கு எதிரானவன் என்று
கற்பிதம் செய்து கொண்டிருக்கின்றார்கள் 11 ஆனால் நான் அப்படியானவன் இல்லை.

அந்தந்த சந்தர்ப்பங்களின் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே எனது கருத்துகளை வெளியிட்டிருந்தேன். மற்றபடி நான் மக்களை மையப்படுத்திய பொருளாதாரத் தன்னிறைவு குறித்த கொள்கையைக் கொண்டவன்.

மேற்கத்தேய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் புரிவதை எதிர்க்கும் நாட்டுப்பற்றாளன்-என்றார்.

Share This Article