வெளிநாடுகளில் கைது செய்யப்படும் இலங்கையைச் சேர்ந்தவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர முடியும் எனப் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பல நாடுகளுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 42 கடத்தல்காரர்கள் தற்போது இந்தியா, துபாய் , ஐரோப்பிய நாடுகளில் பதுங்கி இருப்பதாகத் தெரியவந்துள்ளது .
இவர்களைக் கைது செய்யச் சர்வதேச பொலிஸாரின் ஊடாக அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அறிக்கைகள் தொடர்ச்சியாகப் பெற்று வருவதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.