ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை அடுத்து இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்த நிலையில் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பது குறித்து இதுவரை வெளியாகவில்லை.
இதேநேரம் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தை புறக்கணிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்த போதிலும், சரத் பொன்சேகா உட்பட சில உறுப்பினர்கள் ஜனாதிபதியின் உரையின் போது நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இதேநேரம் நேற்றையதினம் மேலும் பல ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கிரனான.
சரத் பொன்சேகாவின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் கோட்டபாய ஆதரவான முன்னாள் படைத் தளபதிகள் சிலர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.