முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பல வருடங்களாக பதவி வகித்த சுகீஸ்வர பண்டார அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவரின் தனிப்பட்ட செயலாளராக சுகீஸ்வர பண்டார பதவி வகித்தார்.
நிமல் லான்சா தலைமையிலான கட்சியுடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சிங்கள வார ஏட்டின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.