பொதுச் சின்னத்தில் இணைந்து செயற்படத் தயார் – செல்வம் எம்பி!

பொதுச் சின்னத்தில் இணைந்து செயற்படத் தயார் - செல்வம் எம்பி!

editor 2

இலங்கை தமிழரசுக் கட்சியையும் இணைத்துக் கொண்டு பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொதுச் சின்னத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு எந்த விட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ள தாங்கள் தயாராக உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Share This Article