இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் – அமெரிக்கா விமர்சனம்!

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் - அமெரிக்கா விமர்சனம்!

editor 2

இலங்கையின் சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை இலங்கை ஏற்றுக்கொண்டமை சீர்திருத்தம் மற்றும் மீட்சியை நோக்கிய இலங்கையின் பாதையில் எதிர்மறையான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வர்த்தக சூழலை மேம்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதேவேளையில், இந்த சீர்திருத்தங்களை ‘தெளிவான முறையில்’ தனது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய இணையப் பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 70 வீதத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் யோசனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அது பற்றி அறிந்திருக்கவில்லை என்று தூதுவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டமூலத்தை “செயல்படுத்த முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளன.

எனவே ‘நீடித்த, நடைமுறைப்படுத்தக்கூடிய மற்றும் புத்திசாலித்தனமான’ சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பில் குறித்து இலங்கை சிந்திக்க வேண்டும் என்றும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி குறித்து கருத்து தெரிவித்த தூதுவர் ,புதிய உயர் வெற் விகிதங்கள் சராசரி இலங்கையர்கள் மற்றும் வணிகங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டார்.


Share This Article