இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரவ எரிவாயு குழாய்! மின்சாரம் வழங்க நடவடிக்கை தொடங்கியது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரவ எரிவாயு குழாய்! மின்சாரம் வழங்க நடவடிக்கை தொடங்கியது!

editor 2

இலங்கையில் மின்சார கட்டணத்தை குறைக்க கொச்சியிலிருந்து கொழும்பு வரை திரவ இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தையொட்டி, இந்தியா ஹவுஸில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் இந்த விடயத்தை கூறினார். இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வதற்கு இலங்கையைத் தயார்படுத்த மின் கட்டண இணைப்பு செயல் திட்டம் மேற்கொள்ளப்படும்.

அதேநேரம், இலங்கையில் மின்சார செலவைக் குறைக்க கொச்சியிலிருந்து கொழும்பு வரை எல். என். ஜி. குழாய்களை அமைப்பதற்கும் இந்தியா பணி யாற்றி வருவதாக சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இந்தியா – இலங்கை இணைப்பு வழித்தடத்தை அமைப்பதற்கான வழிமுறை களை உருவாக்குவதில் இந்தியா பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா இருப்பதாகவும் அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகவும் இந்தியா இருந்து வருவதாகவும் சந்தோஷ் ஜா கூறினார்.

இந்த நிலையில் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கையின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Share This Article