யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞன், நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – யமுனா ஏரி பகுதியைச் சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த குறித்த இளைஞன் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி , விடுவிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், திடீரென இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில், இளைஞனின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுகிறது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வைத்திய சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.