ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு எதிராக பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்படடுவருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்கள் மீதான பொருளாதார அழுத்தத்தை குறைக்கவும், மக்கள் சுதந்திரமாக வாழவும் அரசாங்கத்தை வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம் கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் ஆரம்பமானது.
போராட்டத்திற்கு சஜித் பிரேமதாஸ தலைமை தாங்கி போராட்டத்தில் பங்குகொண்டிருக்கிறார். பேரணி தொடர்ந்தும் முன்னோக்கி நகர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாரால் நீர்தாரைப் பிரயோம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.