தென்னிலங்கையைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பியத் நிகேஷலா என்பவரே கைது செய்யப்பட்டவராவார்.
சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.
அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.