இலங்கை இராணுவத்தின் 20 ஆவது தளபதி லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.
இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்த தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக் கொள்கைகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகராக பதவி ஏற்றுக்கொண்டார்.
லெப். ஜெனரல் தயா ரத்நாயக்க இலங்கை இராணுவத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் கிழக்கில் முன்னிலை வகித்தவர் என்றும் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.