போதைப்பொருள் வியாபாரம், திட்டமிட்ட குற்றச் செயல்கள் உட்பட்ட நடவடிக்கைகளை கட்டப்படுத்தும் நோக்கில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று அதிகாலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது 212 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ் மற்றும் 169 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 05 பேரிடம் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போதைக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.