சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் – ஹைடாவுக்கு உதவினர் என்று கூறப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசிங்க நேற்று சிவப்பு பிடியாணை பிறப்பித்தார்.
பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் கோரிக்கைக்கு அமைவாக இந்த சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
தென்னிலங்கையின் கள்எலிய, கலகெடிஹேன பிரதேசங்களைச் சேர்ந்தவர்களான தற்போது அவுஸ்திரேலியா, சிரியாவில் வசிக்கும் நால்வருக்கே இந்த சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.