மட்டக்களப்பில் மாவீரர்நாள்; கைதான தந்தைக்கும் மகனுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

மட்டக்களப்பில் மாவீரர்நாள்; கைதான தந்தைக்கும் மகனுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

editor 2

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கு சுடரேற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகன் இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கடந்த புதன்கிழமை (24) உத்தரவிட்டார்.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) மற்றும் அவரது மகன் ஆகியோர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கான விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கைதானவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக நீதிமன்ற அனுமதி கோரி, விசாரணை செய்து வரும் நிலையில், புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்காக  நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, கைதான இருவரையும் எதிர்வரும் ‍பெப்ரவரி 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article