தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக ரட்ண ஜீவன் கூலை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
‘இலங்கை தமிழ் அரசு கட்சி வட்டக்கச்சி கட்சியாக மாறிவிட்டது. எமது கட்சி உலகளாவிய கட்சி. கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்சும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
விரைவில் தேசிய மாநாடு நடத்தப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவார்’ என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தகவலை நேற்றைய தினம் ஆனந்தசங்கரி தெரிவித்திருந்தார் என்று இணையத்தளம் ஒன்று தெரிவித்திருந்தது.
ரட்ணஜீவன் கூல் கடந்த ஆட்சியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.