பெலியத்தவில் ஐவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறையில் வைத்து அவர் இன்று புதன்கிழமை (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர், தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் சாரதி எனவும் இவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
பெலியத்தவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறி சிற்றுண்டி சாப்பிடுவதற்காக நின்றிருந்த டிபென்டரில் பயணித்தவர்களை பின்தொடர்ந்து சென்ற சந்தேக நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
பின்னர் சந்தேக நபர்கள் அதே வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தங்காலையில் இடம்பெற்ற மூவர் கொலைச் சம்பவத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை கண்டறிய பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.