வாகனம் கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு!

வாகனம் கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு!

editor 2

வாகனம் ஒன்றை  கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால்  2000  ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார் . 

வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் சிலர் நீண்ட காலமாக வாகனத்தின் உரிமையை மாற்றாமல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .  

வாகனங்களின் உண்மையான பதிவு உரிமையாளரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வேறு ஒருவரிடமிருந்து வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தால் அதை உடனடியாக அவரது பெயரில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article