நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், முற்பதிவுகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கு அகில இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக, எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் முற்பதிவுகளுக கான கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்துள்ளார்.
தற்போது அனைத்து துறைகளின் பொருளாதார வளர்ச்சியும் 50 வீதத்தால் குறைவடைந்து செல்லும் நிலையே காணப்படுகிறது. மரக்கறிகள் மாத்திரமின்றி அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதால், நட்டத்தை ஈடுசெய்ய முடியாத நிலையில் மண்டப உரிமையாளர்கள் உள்ளனர். திருமண மண்டபங்கள், விழாக்களுக்கான மண்டபங்கள் என்பனவற்றுக்கான உணவு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் தமது தொழில்சார் உறுப்பினர்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையை கருத்தில்கொண்டு முற்பதிவுகளுக்கான கட்டணங்களை 10 வீதம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார