நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபா வரை செலவாகும் என தற்போது மதிப்பிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான நிதி 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்ட நிலைமைக்கு அமைய எதிர்வரும் செப்ரெம்பர் மற்றும் ஒக்ரோபர் மாதங்களுக்கு இடையில் ஜனாதிபதி தேர்தல்
நடத்தப்படும் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முடிவடைகின்றது.
இதன் பின்னர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய ஜனா திபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட 86 அரசியல் கட்சிகள் நாட்டில் செயற்பட்டு வருகின்றன