முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றில் சிக்கி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு செம்மலை பகுதியில் இன்று (20.01.2024) மாலை 4.30 மணியளவில் வீட்டில் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது.
இதனையடுத்து குறித்த சிறுவனை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 10 வயதுடைய பிரசாத் டனிஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாெலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.