இலங்கையின் மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மின்சார சபையின் மேலும் ஊழியர்கள் 51 பேரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துக் கொண்ட மின்சார சபையின் ஊழியர்கள் 15 பேரின் சேவை ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள மின்சாரசபையின் ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.