டெங்குப் பரவல் தீவிரம்; யாழ்.போதனாவில் இருவர் மரணம்!

டெங்குப் பரவல் தீவிரம்; யாழ்.போதனாவில் இருவர் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் அரியாலை பகுதி மற்றும் முல்லைத்தீவு மல்லாவி ஆகிய பகுதி
களைச் சேர்ந்தவர்களாவர்.

அரியாலை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய செல்வராசா சிந்துஜன் திடீரென மயக்கமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.

இதன்போது உயிரிழந்தவருக்கு மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் டெங்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு தொற்றிற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Article