ஒலுவில் வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக முன்னெடுக்கப்படும்!

ஒலுவில் வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக முன்னெடுக்கப்படும்!

editor 2

தொடர் மழையால் இடைநிறுத்தப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறுஅறிவித்தல் வரை தொலைக்காணொளி ஊடாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மழையுடனான காலநிலையினால் குறித்த பல்கலைக்கழகம் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவிருந்தது.

இதுதொடர்பில், இன்று இடம்பெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது கல்வி நடவடிக்கைகளை தொலைக்காணொளி மூலம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருவதன் காரணமாக, கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்துள்ளார்.

Share This Article