ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் 17 பேர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மின்சார சபையின் காசாளர் கருமபீடங்களில் பணியாற்றியவர்களே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.